ஆப்கானிஸ்தான் நாட்டில் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வரும் தலிபான்களுக்கும், தங்களுக்கும் எந்தவித தொடர்புமமில்லை என்று பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் இம்ரான்கான் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற தொடங்கியதை தொடர்ந்து தலிபான் பயங்கரவாதிகள் தங்களுடைய ஆதிக்கத்தை அந்நாட்டில் செலுத்த ஆரம்பித்துள்ளார்கள். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் பத்திரிக்கையாளர்களிடம் பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான இம்ரான்கான் தலிபான் பயங்கரவாதிகள் குறித்த முக்கிய தகவல் ஒன்றை கூறியுள்ளார்.
அதாவது ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தி வரும் தலிபான்களுக்கும் தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும், நாங்கள் அவர்களுடைய செய்தி தொடர்பாளர் அல்ல என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ஆப்கானிஸ்தான் நாட்டின் பொதுமக்களே தங்களுக்கு எவ்வாறான ஆட்சி அமைய வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பாகிஸ்தான் நாட்டின் எல்லையில் வேலி அமைக்கும் பணி 90 சதவீதம் நிறைவடைந்து விட்டதாகவும் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.