Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இதுக்குதான் இந்த நாடகமா….? தீக்குளிக்க முயன்ற வாலிபர்… விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!

கொலை முயற்சி வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக ஒருவர் போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு தீக்குளிக்கப் போவதாக நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள அயனாவரம் மேட்டுத்தெருவில் ஹரிநாத் என்பவர் வசித்துவருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சொத்து தகராறில் ஹரிநாத் தனது தந்தை ஜெய்சிங் மற்றும் சகோதரி சங்கீதா ஆகியோரை இரும்பு கம்பியால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பித்து சென்று விட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவான ஹரிநாத்தை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெறுவதற்கு ஹரிநாத் முயற்சி செய்தபோது, அவருக்கு முன்ஜாமீன் வழங்கப்படவில்லை.

இதனையடுத்து சென்னை வேப்பேரியில் இருக்கும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு சென்று தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். அதாவது கொலை முயற்சி வழக்கில் இருந்து தப்பிக்க தன்னை மனநலம் பாதிக்கப்பட்டவராக சித்தரிப்பதற்காக இவ்வாறு தற்கொலை முயற்சி நாடகமாடியது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன்பின் ஹரிநாத்தை அயனாவரம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.

Categories

Tech |