Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பது பெரும் சவால் – மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் இந்த வைரஸ் பரவலைத் தடுப்பது பெரும் சவால் என மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறியுள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசுகள் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றன என மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தகவல் அளித்துள்ளார். கொரோனோவை கட்டுப்படுத்தும் நடவடிக்கை குறித்து அனைத்து மாநில அரசுகளிடம் இருந்து அறிக்கைகைகள் பெறப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என அவர் கூறியுள்ளார். ஊரடங்கு உத்தரவை 100 சதவிகிதம் பின்பற்ற வேண்டும் ஊரடங்கு உத்தரவு சரியாக பின்பற்றப்படுகிறதா என மாநில அமைச்சர்கள் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்திய அவர்,

100 சதவிகிதம் ஊரடங்கு உத்தரவை பின்பற்றாவிட்டால் கொரோனோவை எதிர்த்து போரிட முடியாது என தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் கொரோனாவை முழுமையாக ஒழிக்க மேலும் 3 வாரங்கள் ஆகலாம் என்றும் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் அரசு தீவிரம் காட்டி வருகிறது என்றும் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |