Categories
உலக செய்திகள்

தந்தையின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம்… கண்கலங்கிய பிரபல டென்னிஸ் வீராங்கனை..!!

அமெரிக்க திரைப்பட நிறுவனத்தின் திரை விழாவில் வில் ஸ்மித் நடித்த “கிங் ரிச்சர்ட்” திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

அமெரிக்க திரைப்பட நிறுவனத்தின் திரை விழாவில் பிரபல டென்னிஸ் வீராங்கனைகளான வீனஸ் வில்லியம்ஸ் மற்றும் செரினாவின் தந்தையான ரிச்சர்ட் வில்லியம்சின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான “கிங் ரிச்சர்ட்” முன்னோட்ட நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த படத்தில் நடித்துள்ள நடிகர் வில் ஸ்மித், வீனஸ் வில்லியம்ஸ், செரினா உள்ளிட்டோர் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இதையடுத்து இந்த திரைப்படத்தை பார்த்த போது உணர்ச்சிவசப்பட்டு தனது கண்கள் கலங்கியதாக நிகழ்ச்சியில் பேசிய வீனஸ் வில்லியம்ஸ் கூறியுள்ளார். இதற்கிடையே படக்குழுவினர் வருகின்ற 19-ஆம் தேதி “கிங் ரிச்சர்ட்” திரைப்படம் HBO Max தளத்திலும், திரையரங்குகளிலும் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளனர்.

Categories

Tech |