பிரெக்சிட் கட்டுப்பாட்டால் பிரான்சில் வசிக்கும் பிரிட்டன் மக்கள் பிரான்சிற்குள் தாவரங்களை கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரெக்சிட் விதியால் நாள்தோறும் பிரிட்டன் மக்களுக்கு புதிது புதிதாக பிரச்சனைகள் ஏற்பட்டு கொண்டேதான் இருக்கின்றது. பிரெக்சிட் விதியால் முதலில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு மட்டுமே நஷ்டம் ஏற்பட்டு வந்தது. தற்போது பிரான்சில் வசிக்கும் பிரிட்டனை சேர்ந்த மக்களுக்கும் அந்த பிரச்சனை ஏற்பட்டுவிட்டது. அது என்னவென்றால், பிரிட்டன் நாட்டவர்களில் சிலர் தங்கள் நாட்டு தாவரங்களை பிரான்சுக்கு கொண்டு வந்து வளர்ப்பர். ஆனால் தற்போது பிரான்சுக்கு பிரிட்டனிலிருந்து தாவரங்களைக் கொண்டு வரவேக் கூடாது என்று புதிதாக ஒரு கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் தாவர நோய்கள் பரவுவதை தவிர்ப்பதற்காக இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் தாவரங்களை கொண்டு வர கூடாது என்று தான் தடை விதிக்கப்பட்டுள்ளது. தாவர விதைகளை கொண்டுவர தடை விதிக்கப்படவில்லை. தாவரங்களின் விதைகளை பயிரிட்டு வளர்க்க விரும்புபவர்கள் விதை துறை சார்ந்த நிபுணரிடம் சான்றிதழ் வாங்கிக் கொண்டுதான் பிரிட்டனுக்குள் வரவேண்டும். ஆனால் அதற்கு ஆகும் செலவை விட பிரான்சில் புது தாவரத்தை வாங்கும் செலவு குறைவுதானாம்.