Categories
உலக செய்திகள்

இரையான அமெரிக்கா…!! நேற்று 2,535 பலி, 4 நாட்களில் 13,514 பேர் மரணம் …!!

கொரோனா வைரஸ் உயிரிழப்பால் அமெரிக்கா பெரும் துயரை சந்தித்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் , பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

 

உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 2,250,660 பேர் பாதித்துள்ளனர். 154,256 பேர் உயிரிழந்த நிலையில், 572,076 பேர் குணமடைந்துள்ளனர். 1,524,328 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 56,958 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர்.உலக வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடும் விளைவுகளை சந்தித்துள்ளது.

தினமும் கொத்துக்கொத்தாக மரணம் ஏற்பட்டு வருவதால் சொல்ல முடியாத துயரை அமெரிக்கா சந்தித்து வருகின்றது. உலக நாடுகளுக்கு சீனா அனுப்பிய கொரோனா மருந்து, சிகிச்சை பொருட்களையெல்லாம் தங்கள் நாட்டிற்கு மிரட்டி திருப்பி விட்ட அமெரிக்காவில் மரணத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அதிபர் ட்ரம்ப் கொரோனாவில் இறுதி கட்டத்தை கடந்து விட்டோம், இனி கவலை இல்லை என்று தெரிவித்தார். ஆனால் அமெரிக்காவால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை.

 

நேற்று ஒரே நாளில் புதிதாக 32,165 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி 2,535 பேர் கொரோனாவால் இறந்துள்ளதால் மொத்த பலி எண்ணிக்கை 37,154 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏழு லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 60,510 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். கடந்த 4 நாளில் மட்டும் ( 14ம் தேதி – 6,185 , 15ம் தேதி – 2618, 16ம் தேதி – 2,176 பேர், 17ம் தேதி – 2,535 ) 13,514 பேர் உயிரிழந்துள்ளது உலக நாடுகளை உலுக்கியுள்ளது.

Categories

Tech |