Categories
தேசிய செய்திகள்

“முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவு தினம்”… பிரதமர் மோடி மற்றும் வெங்கையா நாயுடு… அஞ்சலி…!!

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி மற்றும் துணை குடியரசு  தலைவர் அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் மோடி இருவரும் அஞ்சலி செலுத்தினர்.

மேலும் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்ட பலரும் வாஜ்பாய் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதன்பின் நாட்டின் வளர்ச்சிக்கு வாஜ்பாய் அவர்கள் அளித்த பங்களிப்பை இந்தியா என்றும்  நினைவில் கொள்ளும் என்று பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |