Categories
தேசிய செய்திகள்

“சுகாதார அடையாள அட்டை திட்டம்”… பெரும் புரட்சியை கொண்டுவரும்…. பிரதமர் மோடி உரை…!!

இந்தியாவின் மக்கள் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் சுகாதார அடையாள அட்டை புரட்சியைக் கொண்டுவரும் என தெரிவித்தார் பிரதமர் மோடி.

74-வது சுதந்திர தினத்தையொட்டி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்திய பின்பு, நாட்டு மக்களுக்கு  பிரதமர் மோடி உரையாற்றினார். பிரதமர் ஆற்றிய உரையில், கொரோனா தடுப்புக்காகவும், சிகிச்சைக்காகவும் போராடி வரும் முன்கள பணியாளர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்ட பின், அவர்களின் சேவைக்கு முன்பு தலைவணங்குமாறு கேட்டுக்கொண்டார்.

அதன்பிறகு தேசிய டிஜிட்டல் ஹெல்த் மிஷன் எனும் திட்டத்தை தொடக்கி வைத்த பிரதமர், நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் சுகாதார அட்டை வழங்கப்படும் என்றும் கூறினார். இதுகுறித்து அவர் கூறுகையில்,
“சுகாதார அட்டையில் தனிநபருக்கு கண்டறியப்பட்ட நோய்கள், செய்யப்பட்ட பரிசோதனைகள், அளிக்கப்பட்ட மருந்துகள் மற்றும் மருத்துவ அறிக்கையில் உள்ள தகவல்கள் அடங்கியிருக்கும்” எனத் தெரிவித்தார். மேலும் இந்த திட்டம்  இந்தியாவின் சுகாதாரத்துறையில் புரட்சியைக் கொண்டுவரும் எனவும் தெரிவித்தார்.

Categories

Tech |