Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரே சிக்னலில் தீர்ப்பளித்த பிரதமர் மோடி…. தீர்ந்தது அதிமுக பஞ்சாயத்து?…. இனி எல்லாமே இபிஎஸ் கையில் தான்….!!!!!

அதிமுக கட்சியில் உட்க்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பு வெளிப்படவையாகவே கடுமையாக மோதிக் கொள்கிறார்கள். பெரும்பாலான நிர்வாகிகள் இபிஎஸ் வசம் இருப்பதால் அவரை கட்சியின் நிர்வாகிகள் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்துள்ளனர். ஆனால் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தான்தான் என்று கூறும் ஓபிஎஸ், இபிஎஸ் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்துள்ளார்.

தேர்தல் ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் இறுதி முடிவை பொறுத்துதான் அதிமுக யாருக்கு சொந்தமாகும் என்பது தெரியவரும். அதன்பிறகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக கட்சியில் உட்பட்சிப் பூசல்கள் ஏற்பட்ட போதெல்லாம் டெல்லி மேலிடம் தான் தலையிட்டு பிரச்சனைகளை தீர்த்து வைத்தது. அந்த வகையில் தற்போதும் டெல்லி மேலிடம் தலையிட்டு பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் என்று எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் தரப்பு மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கின்றார்கள். ஆனால் பாஜக மேலிடமோ இபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா ஆகியோர் கட்சியில் இணைந்து செயல்படுவதை தான் விரும்புகிறது.

இதை எடப்பாடி பழனிச்சாமிக்கு புரிய வைக்க முயற்சி செய்தாலும் அவர் விடாப்பிடியாக சசிகலா மற்றும் ஓ. பன்னீர்செல்வத்தை கட்சியில் சேர்க்க கூடாது என்பதில் தீவிரமாக இருக்கிறார். இந்நிலையில் பிரதமர் மோடி நேற்று தமிழகம் வந்த போது மதுரை விமான நிலையத்தில் அவருக்கு கட்சியினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலின், கேகேஎஸ்எஸ் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் பி. மூர்த்தி ஆகியோர் பிரதமரை வரவேற்றனர்.

அதன் பிறகு ஆளுநர் ரவியும் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்பதற்காக விமான நிலையம் சென்றார். பாஜக கட்சியின் சார்பில் முருகானந்தம், எச். ராஜா, சுதாகர் ரெட்டி ஆகியோர் பிரதமரை வரவேற்ற நிலையில், அதிமுக கட்சியின் சார்பில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் 5 பேரும், ஓபிஎஸ் தரப்பில் 5 பேரும் பிரதமரை வரவேற்றனார். விமான நிலையத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனியாக நின்ற போது அவர்களை பிரதமர் மோடி ஒன்றாக வருமாறு அழைத்தார். அவர்களும் வேறு வழியின்றி ஒன்றாக சென்று புன்னகையோடு பிரதமரை வரவேற்றனர்‌‌.

விழா முடிவடைந்த பிறகு பிரதமர் மோடி ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்சை அழைத்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட் நிலையில், அவர் யாரையும் சந்திக்காமல் திரும்பி விட்டார். இதனால் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பு ஏமாற்றத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் விமான நிலையத்தில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்-ஐ பிரதமர் நரேந்திர மோடி ஒன்றாக அழைத்ததில் இருந்தே அவர்கள் ஒற்றுமையாக இருப்பதை தான் பிரதமர் நரேந்திர மோடி விரும்புவதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும் அதிமுக கட்சியில் தற்போது ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் பதவிகள் காலாவதி ஆகிவிட்டதால், அதிமுக அரசியல் அனாதை ஆகிவிட்டது என்றும் இனி இபிஎஸ் தான் சரியான முடிவை எடுக்க வேண்டும் ஒரு பேச்சு தற்போது நிலவுகிறது.

Categories

Tech |