மருத்துவமனைகளின் தயார் நிலை, தனிப்படுத்துதல் வசதிகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் அமைக்கப்பட்ட குழுக்குகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் அமைக்கப்பட்ட 11 குழுக்கத்துடன் ஆலோசித்தார். இதனை தொடர்ந்து மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களை அதிகளவு உற்பத்தி செய்ய பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
உற்பத்தி செய்ய முடியவில்லை என்றால் மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களை கொள்முதல் செய்யுமாறு கூறியுள்ளார். சுவாசக் கருவிகள், முகக்கவசங்கள் மற்றும் கையுறைகள் போதுமான அளவு உள்ளதா என கண்டறியவும் உத்தரவிட்டுள்ளது. வெண்டிலெட்டர்களை இருப்பு வைக்க வேண்டும் என மோடி அறிவுறுத்தியுள்ளார். உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது.
இதுவரை 68 பேர் இந்த வைரஸிற்கு உயிரிழந்துள்ள நிலையில் மேலும் பலருக்கு வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய அரசு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவ்வப்போது அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முக்கிய அறிவிப்புகள் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 3,000ஐ நெருங்குவதால் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் அமைக்கப்பட்ட குழுக்களுடன் இன்று ஆலோசனை நடத்தியுள்ளார்.