கடந்த திங்கட்கிழமை அன்று டி.வி.யில் தோன்றி பேசிய பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை அன்று டி.வி.யில் தோன்றி பேசிய பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசியானது இனி 18 முதல் 44 வயதினருக்கும் இலவசமாக போடப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே இலவச தடுப்பூசி திட்டம் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அமலில் இருந்து வரும் நிலையில் மோடியின் இந்த திடீர் அறிவிப்பானது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இது குறித்து சர்வதேச நிதியம் ஐ.எம்.எப்.பி அமைப்பின் தகவல் தொடர்பு துறையை சேர்ந்த ஜெர்ரி ரைஸ் என்பவர் பத்திரிக்கையாளர்களிடம் ஆன்லைனில் கூறியிருப்பது யாதெனில், கொரோனா தொற்று நோய்களின் சமூக செலவை குறைப்பதற்கும், மனித செலவினங்களை ஈடுகட்டுவதற்கு கூடுதல் ஆதரவை வழங்குவதையும், அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள ஏதுவாக இந்திய அரசின் அறிவிப்பையும் சர்வதேச நிதியம் வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா தொற்று இரண்டாவது அலை காரணமாக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையால் தற்போது இந்தியாவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்படலாம் என்று கூறப்பட்டு வரும் நிலையில் அடுத்த மாதம் இதுகுறித்த கண்ணோட்டத்திற்காண புதுப்பிப்பின்போது எங்களுடைய கணிப்பினை மாற்றி அமைப்போம் என்றும் தெரிவித்துள்ளார். உலக பொருளாதாரத்தில் முக்கியமான இந்தியா பிராந்திய அளவிலும், உலக அளவிலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரிய பங்கு காரணமாக பொருளாதார கண்ணோட்டங்கள் மற்றும் இந்தியா வளர்ச்சி ஆகியவற்றில் பரந்த தாக்கத்தினை கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவை உலகளாவிய வினியோக சங்கிலிகள் மற்றும் வலுவான வர்த்தக இணைப்புகளை கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் சர்வதேச நிதியம் கணிப்பின்படி இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் 2021-22-ம் நிதி ஆண்டில் 12.5 சதவீதமாக இருக்கும் என்று கடந்த ஏப்ரல் மாதம் கணித்துள்ளது. அதே சமயம் இந்திய பொருளாதார வளர்ச்சி 99.5 சதவீதம் என்று இந்திய ரிசர்வ் வங்கி கணிப்பு தெரிவித்துள்ளது.