கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மத்திய அரசு 15,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கொரோனா முன்னெச்சரிக்கை குறித்து பிரதமர் மோடி இரண்டாவது முறையாக நாட்டு மக்களிடம் உறையாற்றினார். அதில் அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு. மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. நோய்த் தொற்றை தடுக்க இது ஒன்றே வழி. அடுத்த சில நாட்களுக்கு வெளியே வருவதை முற்றிலும் தவிருங்கள். வீட்டுக்குள்ளேயே இருங்கள் என்றார்.
மேலும் “வீட்டுக்குள்ளேயே தனித்து இருங்கள்.நாடு மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்திக்கும். ஆனால், இதனை தொடருவதை தவிர வேறு வழி இல்லை. ஒவ்வொரு குடிமகனையும் காப்பாற்றுவதே என் முதல் பணி. நீங்களே ஒரு லட்சுமண ரேகையை போட்டுக் கொள்ளுங்கள். நீங்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால். கொரோனா உங்களை தாக்கக் கூடும். மக்கள் ஊரடங்கில் அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்றீர்கள், ஒவ்வொரு இந்தியனாலும் அது வெற்றி பெற்றது” என்றார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ₹15,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. கொரோனா தொற்று உள்ளவரை கண்டறிய முடியாது என்பதால் எச்சரிக்கையாக இருங்கள். 21 நாட்கள் மிக நீண்டவை என்றாலும் அது உங்களை காக்கும். கடினமான சூழலில் இருந்து இந்தியா மீண்டு வரும் என நம்புகிறேன்
21 நாளை நம்மால் சமாளிக்க முடியாது எனில் பல குடும்பங்கள் நிரந்தரமாக சிதையும்; மக்கள் ஊரடங்கை காட்டிலும் இது கடுமையான ஊரடங்கு. பேரிடரில் இருந்து இந்தியா எப்படி தற்காத்துக் கொள்கிறது என்பதை காட்ட வேண்டிய தருணம் இது என பிரதமர் மோடி எச்சரித்துள்ளார்.