Categories
தேசிய செய்திகள்

“இந்திய அரசியலில் புகழ்பெற்ற ஒரு அத்தியாயம் முடிவுக்கு வந்தது” பிரதமர் வேதனை..!!

பிரதமர் மோடி முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். 

முன்னாள் மத்திய அமைச்சர்  சுஷ்மா சுவராஜ் (வயது 67)  கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.  இவரது உடல்நிலை சமீப காலமாக மிகவும் மோசமாக இருந்து வந்தது. இந்நிலையில்  மாரடைப்பின் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு நேற்று இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அங்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் உடல் நிலை மோசமடைந்ததால்  சிகிச்சை பலனின்றி காலமானார். சுஷ்மா சுவராஜ் 7 முறை மத்திய அமைச்சராக இருந்துள்ளார். இந்திரா காந்திக்கு பிறகு இரண்டாவது பெண் வெளியுறவுத்துறை மந்திரி  சுஷ்மா சுவராஜ் ஆவார்.

Image

இவரது மறைவுக்கு மத்திய மாநில அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி, சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.  பொதுச் சேவைக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர் சுஷ்மா சுவராஜ் . இவர் சிறந்த பேச்சாளர், சிறந்த நாடாளுமன்ற வாதி, சிறந்த நிர்வாகி என்று புகழ்ந்து கூறினார். இந்திய அரசியலில் புகழ்பெற்ற ஒரு அத்தியாயம் முடிவுக்கு வந்தது வேதனை அளிக்கிறது என்றும் உருக்கத்துடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |