Categories
உலக செய்திகள்

“பிரதமர் மோடி , ஜப்பான் பிரதமர் சந்திப்பு” இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை …!!

பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை சந்தித்து  இருநாட்டு உறவுகள் குறித்து பேசியுள்ளார்.

வருகின்ற 28_ஆம் தேதி ( நாளை )  ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரத்தில் 14 வது ஜி 20 உச்சி மாநாடு நடைபெறுகின்றது. இதில் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி இதில் கலந்து கொள்வதற்காக ஜப்பான் புறப்பட்டுச் சென்ற நிலையில்  இன்று அதிகாலை ஒசாகா நகரம் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அங்குள்ள இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து ஒசாகா நகரில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை பிரதமர் மோடி சந்தித்தார். இந்த சந்திப்பில் இரு நாட்டு உறவுகள் குறித்து பேசப்பட்டதாக தெரிகின்றது.

Categories

Tech |