Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடி திறந்து வைக்கும் திட்டம்…. அனைத்துமே பயனுள்ளவை… முதல்வர் பேச்சு..!!

பிரதமர் மோடி இன்று சென்னைக்கு வருகை தந்துள்ளார். பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி சென்னை மாநகர காவல் துறை சார்பாக போக்குவரத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டது.

தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று சென்னை வந்துள்ளார். காவிரி குண்டாறு இணைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ வரையிலான மெட்ரோ ரயில் சேவை, இந்தியன் ஆயில் நிறுவனத்தில் தூத்துக்குடி எரிவாயு திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு சென்னை வந்த பிரதமர் மோடியை, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் முதல்வர் பழனிசாமி, தலைவர்கள் வரவேற்றனர். பின்னர், நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கும் நிகழ்ச்சியில் தற்போது பிரதமர் கலந்து கொண்டு உரையாற்றி வருகிறார். பிரதமர் மோடி திறந்து வைக்கும் திட்டம் அனைத்தும் பயனுள்ளவை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

Categories

Tech |