பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் 16-வது மக்களவையை கலைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மக்களவை தேர்தல் 542 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெற்று நேற்று வாக்கு எண்ணப்பட்டது. இதில் பாஜக ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 349 தொகுதிகளை கைப்பற்றி மிகப்பெரிய வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. இதில் பாரதீய ஜனதா மட்டும் தனியாக 302 இடங்களில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. தற்போதைய அமைச்சரவை மற்றும் மக்களவை முடிவுக்கு வருவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டம் முடிந்த நிலையில் ஜனாதிபதியை பிரதமர் மோடி சந்திக்கிறார்.