Categories
தேசிய செய்திகள்

போராட்டம் வருத்தமளிக்கிறது… ஆனால் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது… பிரதமர் மோடி ட்வீட்..!!

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் துரதிஷ்டவசமானவை, வருத்தமளிக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

குடியுரிமை சட்ட திருத்த மசோதா கடந்த வாரம் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு  எதிராக இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்று வருகிறது. அதேபோல் டெல்லியிலும் ஜாமியா பல்கலை கழக மாணவர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் பேருந்துகள் மீது தீ வைத்து எரிக்கப்பட்டது. 3-பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்களும் சேதமடைந்தது. இப்போராட்டத்தில் போலீசார் மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். இதில் பலரும் காயமடைந்தனர்.

தற்போது அங்கு கலவர பூமியாக காட்சியளிக்கிறது. இதையடுத்து டெல்லி மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும், மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் லக்னோ மாணவர்களும் போராட்டத்தில் இறங்கினர். அதைத்தொடர்ந்து தமிழகத்தில் மதுரை, கோவை சென்னை லயோலா உட்பட பல்வேறு பகுதிகளில் இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். போலீசாரின் நடத்திய மாணவர்கள் மீது நடத்திய தடியடிக்கு அரசியல் கட்சியினர் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரதமர் மோடி குடியுரிமை சட்டத்திருத்த மசோதா குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் துரதிஷ்டவசமானவை, வருத்தமளிக்கிறது.  விவாதம், கலந்து ஆலோசிப்பது ஆகியவையே  ஜனநாயத்தின் இன்றியமையாத அம்சங்கள். பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது நமது நெறிமுறை அல்ல.  குடியுரிமைச் சட்டம் நாடாளுமன்றத்தின்  இரு அவைகளிலும் பல அரசியல் கட்சிகள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் நாட்டின் நூற்றாண்டுகள் பழமையான நல்லிணக்கம் இரக்கம் சகோதரத்துவத்தை விளக்குவதாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |