Categories
அரசியல்

ஹிமாச்சல் பிரதேச தேர்தல் 2022…. தமிழக அரசியலை குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோடி…??

இந்திய தேர்தல் ஆணையம் ஹிமாச்சல் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் வருகிற 12-ஆம் தேதி நடைபெறும் என அறிவித்தது. வாக்குகள் எண்ணப்பட்டு டிசம்பர் 8-ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதனால் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டன. தேர்தல் பிரச்சாரங்கள் இன்றுடன் நிறைவு பெற்றது. இந்நிலையில் இறுதி கட்ட பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, சில மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி செய்வதாக தெரிவித்தார். மேலும் காங்கிரஸ் கட்சியில் உறுதியற்ற தன்மையும், ஊழலும் நிறைந்திருப்பதாக விமர்சனம் செய்தார்.

இதனையடுத்து ஒரு மாநிலத்தில் ஆட்சியை இழந்தால் அதனை காங்கிரஸ் கட்சியால் மீண்டும் பிடிக்க முடியவில்லை என கூறினார். உதாரணமாக தமிழகத்தில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியால் மீண்டும் ஆட்சி அமைக்க முடியவில்லை எனக் கூறினார். மேலும் மேற்குவங்க மற்றும் திரிபுராவில் 50 ஆண்டுகளாகவும், டெல்லி, சிக்கிம், பீகார், நாகலாந்து, உத்தர பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியால் ஆட்சிக்கு வர முடியவில்லை என விமர்சனம் செய்தார்.

Categories

Tech |