Categories
சென்னை தேசிய செய்திகள் மாநில செய்திகள்

“உலகின் மிகப் பழமையான தமிழ் மொழியை போற்றுவோம்”… பிரதமர் மோடி பெருமிதம்.!!

உலகின் மிகப் பழமையான தமிழ் மொழியை போற்றுவோம் என பிரதமர் மோடி பெருமையுடன் பேசினார்.

சென்னை ஐஐடியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, இந்தியா – சிங்கப்பூர் ஹேக்கத்தான் போட்டியில் வென்றோருக்கு பரிசுகளை  வழங்கி உரையாற்றினார். மேலும் ஐஐடி பட்டங்களை வழங்கினார். பின்னர் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி,  உங்கள் வெற்றியில் பெற்றோரின் உழைப்பு உள்ளது இளைஞர்களின் கண்களில் ஒளியை  காண்கிறேன். உங்கள் சாதனையில்  ஆசிரியர்கள் உள்ளனர். உலகின் மிகப் பழமையான மொழி தமிழ், தமிழ்மொழியின் பிறப்பிடம் தமிழகம்’ தமிழ் மொழியை போற்றுவோம் என பெருமையுடன் பேசினார். இதை கேட்ட மாணவர்கள் அரங்கம் அதிர ஒலி எழுப்பி உற்சாகத்தில் மகிழ்ந்தனர்.

Image

தொடர்ந்து பேசிய மோடி, இந்தியர்களின் முயற்சி, உழைப்பு ,தன்னம்பிக்கை கண்டு உலகம் வியக்கிறது. சிறந்த மாணவராக மட்டுமின்றி சிறந்த குடிமகனாக விளங்க வேண்டும். அமெரிக்க பயணத்தின் போது பல்வேறு தரப்பினருடன் உரையாடினேன் எதிர்கால இந்தியாவின் கனவுகளை உங்கள் கண்களில் பார்க்கிறேன். நாட்டின் மிக உயர்ந்த கல்வி நிறுவனமாக சென்னை ஐஐடி உள்ளது. இந்தியாவின் இளைய தலைமுறையினரின் நம்பிக்கையை கண்டு உலகத் தலைவர்கள் வியக்கின்றனர். இளைஞர்களின் திறமைக்கு பின்னணியில் சென்னை ஐஐடி உள்ளது எனவும்  தெரிவித்தார்.

 

Categories

Tech |