நாளுக்கு நாள் அதிகரித்துவரும் தொற்று காரணமாக நாங்கள் எங்களது படிப்பைத் தியாகம் செய்ய தயாராக உள்ளோம் என்று இரு சிறுவர்கள் பேசும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இதனால் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக சில மாநிலங்களில் தொடர்ந்து தொற்று குறைந்து கொண்டு வருகின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சிபிஎஸ்சி பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வை ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார் .இதை தொடர்ந்து பல மாநிலங்களும் பிளஸ் டூ பொதுத் தேர்வை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தனர். இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் இரண்டு குழந்தைகள் உள்ளன.
#कोरोना से हम जंग जीतेंगे ज़रूर। बच्चा-बच्चा बलिदान के लिए तैयार है। ☺️ pic.twitter.com/d0A5a7x4sy
— . (@AshokShrivasta6) June 4, 2021
அந்த குழந்தைகள் நோய் தொற்றுக்கு எதிராக போராடுவதற்கு தீர்வு ஒன்றை கூறுகிறோம் என்று சொல்கின்றனர். மேலும் பிரதமர் நரேந்திர மோடி சொன்ன அனைத்தையும் தாங்கள் கடைபிடித்து வருவதாக உறுதி அளித்தனர். இறுதியாக நோய் தொற்றை எதிர்த்து போராட நாங்கள் எங்கள் கல்வியை தியாகம் செய்வதற்கு தயாராக உள்ளோம். எனவே பள்ளிகளை திறக்க வேண்டாம் என நகைச்சுவையுடன் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் 7 ஆண்டுகள் கூட நீங்கள் பள்ளியை மூடி வைக்கலாம். தொற்றை ஒழிப்பதற்காக நாங்கள் இந்த தியாகத்தை செய்கிறோம் என்று அவர்கள் கூறும் வீடியோ பலரையும் கவர்ந்துள்ளது.