கொரோனா தொடர்பாக நேற்று நாட்டு மக்களுக்கு அறிவுறுத்திய நிலையில், தனது தொகுதி மக்களுக்கு பிரதமர் மோடி இன்று அறிவுறுத்துகிறார்.
இந்தியாவில் தீயாக பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு இதுவரையில் 530 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே நேற்று நாட்டு மக்களிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து 2 ஆவது முறையாக பிரதமர் மோடி பேசினார்.
அதில், அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்படும் என்றும், 21 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் இருந்தாலும், அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்கும் என்றும் தெரிவித்தார். மேலும் நாட்டு மக்களுக்கு பல்வேறு அறிவுரைகளை கூறி, வேண்டுகோள் விடுத்தார்.
இந்த நிலையில், நேற்று கொரோனா தொடர்பாக நாட்டு மக்களுக்கு அறிவுறுத்திய நிலையில், தனது தொகுதி மக்களுக்கு பிரதமர் மோடி இன்று அறிவுறுத்துகிறார்.
தனது வாரணாசி மக்களவை தொகுதி மக்களிடம் இன்று மாலை 5 மணிக்கு காணொளியில் பிரதமர் மோடி கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக உரையாற்றுகிறார்.