Categories
மாநில செய்திகள்

அலறும் போராளிகள் ”பிரதமர் மோடியின் அதிரடி” கலக்கத்தில் தமிழ்நாடு …..!!

சீனா பொருட்களால் இந்தியாவின் வியாபாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் சீனாப் பொருட்களுக்கு, குறிப்பாக சீனாப் பட்டாசுக்கு மோடி தடை விதிக்க உள்ளார்.

மேக் இன் இந்தியா பொருட்கள் மட்டுமே விற்பனை செய்ய முடியும். இது சீனா ஏஜெண்டுகள் வயிற்றில் புளியைக் கரைத்து விட்டது.இந்தியாவின் வளர்ச்சி பிடிக்காமல் ஸ்டெர்லைட் போராட்டத்தை  சீனா தூண்டிவிடுவதாக பாஜக தலைவர்களும், ஒரு சில நடிகர்களும் கூறினார்கள். பிரதமர் மோடி சீனா அதிபர் ஜி ஜின்பிங் உடன் போனில் பேசும் போது, ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு, யார் யார் எவ்வளவு பணம் வாங்கியுள்ளனர்? என்று கேட்டுள்ளார்.உடனே சீனா அதிபர், நான் மாமல்லபுரம் வரும் போது, அந்த லிஸ்ட்டை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டு வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

சீனாவின் உதவியோடு ஸ்டெர்லைட் போராட்டம் தூண்டப்பட்டது என்று வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. எல்லா ஊடகத்திலும் அந்த செய்தி வந்தது.
சீனா அதிபரிடம் இந்தியப் பிரதமர் மோடி, ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு சீனாவிடம் பணம் வாங்கியவர்களின் லிஸ்டை, பிரிண்ட் அவுட்டாக அல்லது எக்ஸெல் சீட்டில் டைப் பண்ணி பென் டிரைவில் வாங்கி விட்டால் இது குறித்து வர இருக்கும் பத்திரிகை செய்தி மூலம் தமிழகத்தின்
உண்மை போராளிகள் யார் என்பதைக் கண்டுபிடித்து விடலாம்.

வெளிநாட்டுப் பணம் இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி மூலம் மட்டுமே முடியும்.கூடன்குளம் போராட்டத்துக்கு வந்த அமெரிக்கா பணம், ஹைட்ரோகார்பன், மீத்தேன், நியூட்ரினோ, ஜல்லிக்கட்டு, நீட், கீழடி, ஸ்டெர்லைட், கெய்ல், டாஸ்மாக், பொள்ளாச்சி, பேனர், டோல்கேட், எட்டுவழிச்சாலை, உயர்மின்கோபுரம் போன்ற போராட்டங்களுக்கு வந்த வெளிநாட்டுப் பணம் குறித்த விபரங்கள் பாஜகவின் மாரிதாஸ் வகையறாக்களுக்கு தெரிந்த அளவிற்கு கூட உள்துறை அமைச்சகத்துக்கும், மத்திய உளவுத்துறைக்கும், மத்திய வருமானவரித்துறைக்கும், மத்திய அமலாக்கத்துறைக்கும் தெரியவில்லை. இதுகுறித்து கூட அரசியல் விமர்சகர் மாரிதாஸ் ஆதாரங்களைக் காட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கடுமையாக கண்டித்துள்ளார் பிரதமர் மோடி.

இப்போது ஐநா மாநாட்டுக்குச் சென்ற பிரதமர் மோடி, கூடங்குளம் போராட்டத்துக்கு கொடுத்த அமெரிக்கப் பணம், கிறித்தவ பாதிரியார்களுக்கு வந்த பணம், உள்பட உள்துறை அமைச்சகம் அனுமதியோடு இந்தியாவிற்குள் வந்த வெளிநாட்டுப் பணம் குறித்த விபரங்களை, அமெரிக்க    அதிபர் டிரம்பிடம் பென் டிரைவில் வாங்கி வந்து விட்டார்.இந்தியாவில் இருந்து கொண்டு, FCRA எனும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்று,வெளிநாட்டுப் பணத்தை கோடி கோடியாக வாங்கி,மத்திய அரசின் திட்டங்களை எதிர்த்து போராடுபவர்கள் யார்? யார்? என்ற விபரம் அனைத்தும் பிரதமர் மோடியின் பென் டிரைவில் வந்து விட்டது.

இந்நிலையில் ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு பணம் கொடுத்த சீனா மட்டும் தான் பாக்கி.
அதையும் சீனா அதிபர் மாமல்லபுரம் வரும் போது பென் டிரைவ், பிரிண்ட் அவுட் இரண்டையும் கொடுத்து விடுவார்.பிரதமர் மோடியின் அதிரடி நடவடிக்கை இன்னும் ஒரு வாரத்தில் இருக்கும். அதன்பிறகு தமிழ்நாட்டில் குடிதண்ணிக்குக் கூட போராட்டம் நடக்குமா என்று தெரியவில்லை.
சீனா அதிபர் பேச்சுவார்த்தையில்,இந்திய – பூடான் எல்லையில் சீனாவால் போடப்பட்ட டோக்லாம் சாலை அகற்றப்படலாம்.அருணாச்சல் பிரதேச மாநிலத்தையும், காஷ்மீரின் ஒரு பகுதியையும் ஆக்கிரமித்து வைத்துள்ள சீனாவிடம் இருந்து, இந்திய தாய்நாட்டின் நிலங்கள் மீட்கப்படலாம். இந்தியாவிற்குச் சொந்தமான கச்சத்தீவு பகுதியில் இலங்கை – சீனா ராணுவத்தளம் அமைத்துள்ளது. அது அகற்றப்பட்டு கச்சத்தீவு மீட்கப்படலாம். எது நடந்தாலும் தீபாவளி கொண்டாடத் தயாராக இருங்கள்.

Categories

Tech |