கும்பல் ஒன்று மோடியின் வாரணாசி தொகுதி அலுவலகத்தை விற்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் வெற்றி பெற்றார். வாரணாசி தொகுதி அலுவலகம் வாரணாசியின் ஜவகர் நகர் பகுதியில் உள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதி அலுவலகத்தை புகைப்படம் எடுத்த நபர்கள் அந்த புகைப்படத்தை ஆன்லைன் விற்பனை தளமான OLX வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். இதையடுத்து யாருமே இதை கவனிக்காத நிலையில் பொதுமக்கள் பலரும் இதை கவனித்துள்ளனர்.
இதையடுத்து மோடியின் வாரணாசி தொகுதி அலுவலகம் விற்பனைக்கு என ஆன்லைனில் புகைப்படம் பதிவிடப்பட்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த காவல்துறையினர், விசாரணையில் அலுவலகத்தின் புகைப்படத்தை OLXல் பதிவேற்றம் செய்தது 4 பேர் கொண்ட கும்பல் என தெரியவந்துள்ளது. இதையடுத்து கைது செய்யப்பட்ட நபர்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.