பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கு கடந்த 5 ஆண்டுகளில் ரூ .446 கோடிக்கு மேல் செலவாகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு, வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன் பதிலளித்துள்ளார். அவர் அளித்த பதிலில், பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கு கடந்த 5 ஆண்டுகளில் ரூ 446. 52 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆண்டு வாரியாக பயண செலவு :
2015-16-ம் ஆண்டு – 121 கோடியே 85 லட்சம்,
2016-17-ம் ஆண்டு – 78 கோடியே 52 லட்சம்,
2017-18-ம் ஆண்டு – 99 கோடியே 90 லட்சம்
2018-19-ம் ஆண்டு – சுமார் 100 கோடி,
2019-20-ம் ஆண்டு – 46 கோடியே 23 லட்சம்
ஆண்டு வாரியாக பிரதமர் மோடியின் பயணத்திற்காக இத்தனை கோடி செலவிடப்பட்டுள்ளது என்று முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.