Categories
தேசிய செய்திகள்

நாட்டு மக்களிடம் இன்று பிரதமர் மோடி பேசுகிறார் – முக்கிய தகவல் வெளியாக வாய்ப்பு ..!!

இன்று காலை பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உறையற்ற இருப்பதால் மக்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வாராந்திர வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று பேசி வருவதை வழக்கமாக வைத்துள்ளார். மங்கி பார்த்து எனப்படும் மனதில் இருந்து பேசுகிறேன் என்ற இந்த வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பேச இருக்கின்றார். இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டு பிரதமர் பேச இருக்கின்றார்.

நாளை மறுநாளோடு மூன்றாம் கட்ட ஊரடங்கு தளர்வு நிறைவடைய இருக்கும் நிலையில், நான்காம் கட்ட தளர்வில் மக்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் ? தனிமனித இடைவெளி, முகக் கவசம் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவுரை வழங்குவார் என தெரிகிறது.

Categories

Tech |