இந்தியாவிற்கு தீங்கு செய்யும் அனைவருக்கும் அவர்களது மொழியிலேயே பாடம் கற்பிப்போம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியேற்றி, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி பேசுகையில்,” எல்லைக்கட்டுப்பாட்டு கோடு முதல் உண்மையான எல்லைக்கட்டுப்பாடு கோடு வரை நமது நாட்டின் இறையான்மைக்கு எதிராக பாதுகாப்புக்கு தீமை விளைவிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அவர்களது மொழியிலேயே நமது வீரர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.
எங்களுக்கு இந்தியாவின் ஒருமைப்பாடுதான் முக்கியம். இதற்காக நமது வீரர்கள் என்ன செய்வார்கள் என்பதையும், நாடு என்ன செய்யும் என்பதையும் இந்த உலகம் லடாக்கில் பார்த்துள்ளது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமற்ற உறுப்பினராக தேர்வு செய்ய 192 நாடுகளில் 184 நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு கொடுத்திருப்பது உலக நாடுகள் இந்தியாவுடன் இருப்பதற்கான சான்று ஆகும்” இவ்வாறு அவர் கூறினார்.