முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு இன்று 65-வது பிறந்தநாள் ஆகும். தேர்தல் பிரசாரத்துக்காக திருப்பரங்குன்றம் சென்ற அவர் இன்று காலையில் மதுரையில் தங்கி இருந்துள்ளார். அப்போது அவர் தனது பிறந்த நாளைக்கூட கொண்டாடாமல் எளிமை காட்டிக்கொண்டு வழக்கம் போல் பிரசார பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாளை தெரிந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள்மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும் எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.