பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று சவுதி அரேபியா செல்லவிருக்கிறார். இந்த பயணத்தின்போது இந்தியாவுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையேயான எரிசக்தி, பாதுகாப்பு, கொள்முதல் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து தொடர்பான பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளார்.இப்பயணம் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மோடியின் 2016ஆம் ஆண்டு வருகைக்குப் பிறகு இந்தப் பயணம் மீண்டும் ஒரு முக்கிய பயணமாக மாறும் என்று எதிர்பார்ப்பதாக ரியாத்தின் இந்திய தூதர் அசாஃப் சயீத் கூறினார். இன்று பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, நாளை சவுதி மன்னர் முகமது பின் சல்மான் அல் சவுத்தை சந்திக்கவுள்ளார். தொடர்ந்து அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பொதுகூட்டத்தில் அவர் பேசவுள்ளார்.