ஜே.பி. மோர்கன் சர்வதேசக் குழுவின் உறுப்பினர்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சபையின் உறுப்பினர்களாக இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், அமெரிக்காவின் அமைச்சர்கள் கான்டோல்லீசா ரிச், ஹென்றி கிஸ்ஸிங்கர், ரத்தன் டாடா உள்ளிட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்தச் சந்திப்பு குறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது, ‘ஜே.பி. மோர்கன் சர்வதேச சபைக் கூட்டத்துடன் சுமுக சந்திப்பு நடைபெற்றது. சுகாதாரம், கல்வி மற்றும் ஐந்து ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை எட்டுவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது’ என்று குறிப்பிட்டுள்ளார்.2007ஆம் ஆண்டுக்குப் பிறகு, தற்போதுதான் இந்தக் கூட்டம் இந்தியாவில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Very good interaction with the JP Morgan International Council, an illustrious gathering of top policy makers, thinkers, statesmen and stateswomen, captains of industry, innovators among others. Spoke about India’s efforts in health, education and becoming a $5 Trillion economy. pic.twitter.com/vf0bA1C4kS
— Narendra Modi (@narendramodi) October 22, 2019