Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

ஒரே காலில்… கேட்ட முதல்வர்… ஓகே சொன்ன பிரதமர்… மாஸ் காட்டும் எடப்பாடி!

பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பு பணிகள் குறித்து தமிழக முதல்வர் பழனிசாமியிடம் தொலைபேசி மூலம் கேட்டறிந்தார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் காட்டுத் தீயை போல வேகமாக பரவி வந்ததன் காரணமாக, இதனை கட்டுப்படுத்த ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. ஆனால் கொரோனாவின் தாக்கம் குறையாததால், தமிழக முதல்வர் உட்பட பல்வேறு மாநில முதல்வர்களின் வேண்டுகோளின் படி மேலும் மே  3ஆம்தேதி வரை மத்திய அரசு ஊரடங்கை நீட்டித்து அறிவித்தது. மேலும் அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது..

இருப்பினும் கொரோனா பாதிப்பு தற்போது உயர்ந்து கொண்டுதான் செல்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை பாதிப்பு தினமும் உயர்ந்தாலும் அதிக நோயாளிகளை குணப்படுத்தி வீட்டுக்கு அனுப்பியுள்ள மாநிலங்களில் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் விரைந்து கொரோனா சோதனை செய்யக்கூடிய ரேபிட் டெஸ்ட் கிட்டுகள் 24,000 இருக்கின்றன. இதனால் விரைவாக தமிழகத்தில் கொரோனா சோதனை நடைபெற்று வருகிறது. இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,372 ல் இருந்து 1,477 ஆக அதிகரித்துள்ளது..

இந்நிலையில் தமிழகத்தில் தடுப்பு பணிகள் குறித்து தமிழக முதல்வர் பழனிசாமியிடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் கேட்டறிந்தார். இந்த உரையாடலின் போது தமிழகத்திற்கு கூடுதலாக ரேபிட் டெஸ்ட் கிட் வழங்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை வைத்தார். முதல்வர் பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று பிரதமரும் கூடுதலாக ரேபிட் டெஸ்ட் கிட் தருவதாக கூறியிருக்கிறார்.

முன்னதாக கொரோனா தடுப்பு பணிகளுக்கு பிரதமர் மோடியிடம் தமிழக அரசு 9,000 கோடி கேட்டுள்ளது.. ஆனால் குறைவான தொகையே மத்திய அரசு கொடுத்தது குறிப்பிடத்தக்கது..

Categories

Tech |