பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை மையமாக வைத்து மற்றொரு படம் தயாரிக்கப்படவுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு குறித்த “பி.எம். நரேந்திர மோடி” என்ற திரைப்படம் வெளியானது. இத்திரைப்படத்தில் மோடியின் கதாபாத்திரத்தில் விவேக் ஓபராய் நடித்திருந்தார். இந்நிலையில் பிரதமர் மோடியின் வாழ்க்கையை மையமாக வைத்து மற்றொரு படத்தையும் எடுக்க முடிவு செய்துள்ளனர்.
பிரபல வங்கமொழி இயக்குனரான மிலன் பவுமிக் இப்படத்தை இயக்க உள்ளார். “ஏக் அவுர் நரேன்” என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் மோடி கதாபாத்திரத்தில் மகாபாரத தொடரில் யுதிஷ்டிரர் கதாபாத்திரத்தில் நடித்த கஜேந்திர சவுகான் நடிக்க உள்ளார். மேலும் இப்படத்தில் விவேகானந்தரின் வாழ்க்கை கதையில் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.