Categories
தேசிய செய்திகள்

பிரதமரின் இலவச வீட்டு வசதி திட்டம்…. விண்ணப்பிப்பது எப்படி….? இதோ முழு விபரம்….!!!!!

இந்தியாவில் எந்த ஒரு ஏழை மக்களும் வீடு இல்லாமல் இருக்கக் கூடாது என்பதற்காக மத்திய அரசாங்கம் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு வீடு கட்டுவதற்கான மானியம் வழங்குகிறது. இந்த வீடு கட்டுவதற்காக 2.50 லட்ச ரூபாய் மானியமாக வழங்கப்படும். இதில் ஒரு லட்சத்தை மாநில அரசும், 1.50 லட்சத்தை மத்திய அரசும் வழங்குகிறது. இந்த திட்டத்தில் நீங்கள் இணைந்திருந்தால் உங்கள் பெயரை எப்படி சரி பார்ப்பது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

அதன்படி பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் இணையதள பக்கத்திற்குள் சென்று சிட்டிசன் அசெஸ்மென்ட் என்ற திட்டத்தை கிளிக் செய்தால் ஒரு புதிய பக்கம் திறக்கும். அதில் உங்கள் மதிப்பீட்டு நிலையை கண்காணிக்கவும் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து உங்கள் பதிவு எண்ணை நிரப்பி, தேவையான விவரங்களை உள்ளீடு செய்த பிறகு உங்கள் மாநிலம், மாவட்டம் போன்றவற்றை தேர்வு செய்தால் நிலையை சரிபார்த்துக் கொள்ளலாம்.

இந்நிலையில் திட்டத்தில் புதிதாக இணைய விரும்பினால் pmaymis.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்குள் சென்று குடிமகன் மதிப்பீடு என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, நீங்கள் தங்குவதற்கு ஏற்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். அதன் பிறகு ஆதார் எண்ணை பதிவிட்டு செக் என்பதை கிளிக் செய்தால் ஒரு ஆன்லைன் படிவம் திறக்கும். இந்தப் படிவத்தில் கேட்கப் பட்டுள்ள விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பித்தால் திரையில் ஒரு விண்ணப்ப எண் காட்டும். மேலும் இந்த விண்ணப்ப என்னை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

Categories

Tech |