பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் மின்சார கட்டணத்தை கட்டவில்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படுமென்று அந்நாட்டு மின்சாரவாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் அலுவலகத்தின் மின்சார பாக்கி பணத்தை செலுத்தாமல் இருந்ததாக சர்சை எழுந்தது. மேலும் மின்சார பாக்கி வைத்துள்ளது தொடர்பாக இஸ்லாமாபாத் மின்விநியோக வாரியம் பிரதமர் அலுவலகத்துக்கு நோட்டீஸ்ஸை அனுப்பியுள்ளது. அதில் பிரதமர் அலுவலகம் மின்கட்டண பாக்கியாக ரூ.41 லட்சம் வைத்துள்ளது. கடந்த மாதமே கட்ட வேண்டிய மின்சாரக் கட்டணம் ரூ.35 லட்சம் கட்டவில்லை.
இது தொடர்பாக மின்சார வாரியம் சார்பில் பலமுறை பிரதமர் அலுவலகத்துக்கு தகவல் அனுப்பியும் பதில் வரவில்லை. தொடர்ந்து 2 மாதங்கள் மின்கட்டணம் செலுத்தவில்லை என்றால் மின் இணைப்பை துண்டிக்கலாம் என்ற விதி மின்சார வாரிய சட்டத்தில் உள்ளது. எனவே மின்சார கட்டணத்தை செலுத்தவில்லை என்றால் மின் இணைப்பை துண்டிக்கபட்டுமென அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.