பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் நாடாளுமன்ற அலுவலகத்தை விற்பனை செய்வதாக OLX ல் விளம்பரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு வந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை செய்யத் தொடங்கினார். ஆன்லைன் விற்பனை தளமான ஓஎல்எக்ஸ் இல் ஒரு சிலர் 7.5 கோடிக்கு பிரதமர் அலுவலகத்தை விற்பனைக்கு வைத்துள்ளனர். வாரணாசியில் குருதம் காலணியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தை லட்சுமிகாந்த் ஆஷா என்ற நபர் ஓஎல்எக்ஸ் இல் விளம்பரம் செய்துள்ளார்.
எனினும் இந்த விளம்பரம் உடனடியாக அகற்ற பட்டதாகவும் தற்போது இது குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் வாரணாசி எஸ்பிபி அமித் குமார் தெரிவித்தார். இந்த வழக்கில் புகைப்படத்தை கிளிக் செய்த நபர் உட்பட இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விளம்பரத்தில் ‘ஹவுஸ் & வில்லா’ என்ற பிரிவின் கீழ் விளம்பர எண் ஐடி 1612346492 ஐ ஓ.எல்.எக்ஸ் இல் வெளியிடப்பட்டதாகவும், அந்த வியாபாரி “குளியலறையுடன் நான்கு படுக்கையறைகள், உள்ளது” என்று பட்டியலிடப்பட்டிருந்தது என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது “ 6500 சதுர அடி பரப்பளவு, இரண்டு மாடி கட்டடம் வடகிழக்கு கார் நிறுத்துமிடத்தை கொண்டுள்ளது” போன்ற விவரங்களைக் கொண்டிருந்தது. சொத்தின் பெயர் ‘பி.எம்.ஓ அலுவலகம் வாரணாசி’ எனவும் அந்த விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்தனர்.