மருத்துவமனையில் இருக்கும் இளவரசர் பிலிப்பை சந்திக்க அவர் மகன் சார்லஸ் 100 மைல் தூரம் கடந்து தன் தந்தையை சந்தித்துள்ளார்.
பிரிட்டன் இளவரசரான 99 வயது உடைய பிலிப் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்திருந்தது. இந்நிலையில் இளவரசர் பிலிப்பின் மகனான, வேல்ஸ் இளவரசருமான சார்லஸ் தந்தையை பார்ப்பதற்காக நேற்று 100மைல் தூரம் பயணம் செய்து மருத்துவமனைக்கு வந்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளவரசர் பிலிப்பை சந்தித்த ராஜ குடும்பத்தின் முதல் உறுப்பினர் இவரே ஆவார். இவர் சுமார் 30 நிமிடங்கள் மருத்துவமனையில் இருந்துள்ளார். பிலிப் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாகவே மருத்துவமணையில் சேர்க்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் அவர் பல நாட்களாகவே உடல் நலம் சரி இல்லாமல் இருந்துள்ளார்.
இவருக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு கரோனரி தமனி சிகிச்சை போன்ற பல்வேறு சிகிச்சைகள் நடந்தது. அதன்பின் 2012 ஆம் ஆண்டு சிறுநீர்ப்பை தொற்றினால் பாதிக்கப்பட்டார். 2013ஆம் ஆண்டு அவருக்கு அடி வயிற்றில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 2014ஆம் ஆண்டு செவிப்புலன் கருவிகளை பயன்படுத்த தொடங்கினார். இதனை தொடர்ந்து 2016ம் ஆண்டு ஒரு சிறிய வியாதியால் அவதிப்பட்டார். ஆகையால் இப்படி தொடர்ந்து உடல்நிலை பிரச்சனையை சந்தித்து வந்த பிலிப்ஸ் கடந்த 2017 ஆம் ஆண்டு பொது கடமையிலிருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.