பிரிட்டன் இளவரசி டயானா, திருமணத்தில் அணிந்திருந்த மிக பிரம்மாண்ட உடை கென்சிங்டன் அரண்மனையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது.
பிரிட்டன் இளவரசர் சார்லஸ் மற்றும் டயானாவின் திருமணம், கடந்த 1981ம் வருடம் ஜூலை 29ஆம் தேதியன்று லண்டனில் உள்ள செயிண்ட் பால் தேவாலயத்தில், உலகமே வியக்கும் வகையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. கடந்த 1997ம் வருடத்தில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி அன்று விபத்தில் டயானா பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில், டயானாவின் 40 வது திருமண நாளை முன்னிட்டு திருமணத்தில் அவர் அணிந்திருந்த ஆடை கென்சிங்டன் அரண்மனையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. இளவரசர் சார்லஸ் மற்றும் அவரின் சகோதரர் ஹரி இருவரும் காட்சிக்கு வைப்பதற்கு உடையை இலவசமாக கொடுத்து உதவியிருக்கிறார்கள்.
இது குறித்து கண்காட்சி அமைப்பாளர்கள் கூறுகையில், இளவரசி டயானா திருமணத்தில் அணிந்திருந்த ஆடை வரலாற்றில் மிகப் பிரபலமானது என்று கூறியிருக்கிறார். மேலும் இந்த ஆடையை வடிவமைத்தவர்களில் ஒருவரான எலிசபெத் இம்மானுவேல் கூறுகையில், இந்த ஆடையை வடிவமைப்பதற்கு முன்பு இளவரசி டயானா என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய சம்பவம் நினைவில் இருக்கிறது.
அது ஒரு வித்தியாசமான தருணம். அது வாழ்க்கையில் மீண்டும் வராது என்று நினைவுபடுத்த கூடிய தருணம் என்று தெரிவித்திருக்கிறார். இந்த கண்காட்சி நேற்று தொடங்கியது. அடுத்த வருடம் ஜனவரி மாதம் வரை நீடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.