Categories
உலக செய்திகள்

தாத்தா இறந்த செய்தி… இளவரசர் ஹரி செய்தது என்ன..? வெளியான புதிய தகவல்கள்..!!

பிரித்தானியாவின் இளவரசரான பிலிப் இறந்த செய்தியினை தொலைபேசி வாயிலாக அமெரிக்காவில் வாழும் இளவரசர் ஹரிக்கு கூற அழைத்தபோது, அவர் எழுந்திருக்காத காரணத்தினால் அவருடைய வீட்டிற்கு அமெரிக்க காவல்துறையினர் அனுப்பிவைக்கப்பட்டனர் என்ற புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் இளவரசர் பிலிப் மதியம் 12 மணிக்கு இறந்ததாக செய்தி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இளவரசர் ஹரி வாழும் கலிபோர்னியாவை பிரித்தானியாவும் எட்டு மணி நேர வித்தியாசம் என்பதால் இளவரசர் ஹரியை தொலைபேசி வாயிலாக அழைத்ததாகவும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆனால் கலிபோர்னியாவில் அப்போது அதிகாலை 3:00 என்பதால் தூங்கிக்கொண்டு இருந்த இளவரசர் ஹாரி அரண்மனையில் இருந்து வந்த அழைப்புக்கு பதில் அளிக்காத காரணத்தினால் அமெரிக்க காவல்துறையினர் இளவரசர் ஹரி வீட்டிற்கு சென்று அவருடைய தாத்தா இறந்த செய்தியை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால் வாஷிங்டன் டிசியில் உள்ள பிரித்தானிய தூதரகமோ, லண்டனில் உள்ள அமெரிக்க தூதரகமோ அவ்வாறு காவல் துறையினருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளன.

Categories

Tech |