Categories
உலக செய்திகள்

“மேகன் கூறிய தகவலால் மனமுடைந்த ஹரி”.. பதற்றத்துடன் விழாவில் பங்கேற்பு.. வீடியோவுடன் வெளியான பின்னணி..!!

பிரிட்டன் இளவரசர் ஹரி மிகுந்த கவலை மற்றும் பதற்றத்துடன் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றதாக கூறியிருக்கிறார். 

பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் அவரின் மனைவி மேகன் இருவரும் கடந்த 2019 ஆம் வருடத்தில் Royal Albert Hall ல் நடந்த ஒரு கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். அப்போது இருவரும் புன்னகையுடன் வந்த விருந்தினர்களுடன் கலந்துரையாடிய வீடியோ வெளியாகியுள்ளது. ஆனால் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன், அதிர்ச்சியளிக்கும் செய்தியை மேகன் ஹரியிடம் கூறியிருக்கிறார்.

மேகன் அப்போது ஆறு மாதம் கர்ப்பமாக இருந்தார். அந்த நேரத்தில் தனக்கு தற்கொலை எண்ணங்கள் ஏற்பட்டிருப்பதாக கண்ணீருடன் கணவரிடம் கூறியிருக்கிறார். இதனை கேட்ட ஹரி அதிர்ந்து போயிருக்கிறார். மேலும் ஹரி, தன் 12 வயதில் தாயை இழந்திருக்கிறார்.

தற்போது நானும் தற்கொலை செய்தால் அவரின் வாழ்க்கையின் அர்த்தமாக இருக்கும் மற்றொரு பெண்ணும் இல்லாமல் அவர் தவித்து விடக்கூடாது என்பதற்காகவே தற்கொலை செய்யவில்லை என்று மேகன் தெரிவித்திருக்கிறார். மேலும் தாயை இழந்து மனதிற்குள் தூக்கத்தை அடைத்துக் கொண்டிருந்த ஹரியை மனநல சிகிச்சைக்கு செல்லுமாறு மேகன் தான் கட்டாயப்படுத்தி இருக்கிறார்.

இவ்வளவு பதற்றம் மற்றும் கவலையை மனதில் வைத்துகொண்டு இருவரும் வெளியில் சிரித்துக் கொண்டு விழாவில் பங்கேற்றிருக்கிறார்கள். தற்போது இளவரசர் ஹரி தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக மனம் திறந்து பல தகவல்களை கூறி வருகிறார். அந்த வகையில் அவர் அளித்த நேர்காணலில் ஒன்றில் இந்த தகவல்கள் அனைத்தையும் கூறியிருக்கிறார்.

Categories

Tech |