Categories
உலக செய்திகள்

“இளவரசர் ஹரி மகாராணியிடம் கேட்கவில்லை!”.. அவரே செய்திருக்கிறார்.. வெளியான தகவல்..!!

பிரிட்டன் இளவரசர் ஹரி, தன் மகளுக்கு லிலிபெட் என்று பெயர் சூட்டுவதை மகாராணியரிடம் தெரிவிக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதியினருக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ஹரி, “லிலிபெட் டயானா மவுண்ட்பேட்டன் விண்ட்சர்” என்று பெயர் சூட்டினார். இதில் லிலிபெட் என்பது மகாராணியாரை, அவரின் கணவரான இளவரசர் பிலிப் மட்டுமே அழைக்கும் செல்ல பெயர்.

எனவே, ஹரி தனக்கு குழந்தை பிறக்கும் முன்பு மகாராணியாரிடம் லிலிபெட் என்று பெயர் சூட்டுவது தொடர்பில் பேசியதாக அவர்களுக்கு நெருக்கமான வட்டாரம் கூறியது. ஆனால் தற்போது அரண்மனை வட்டாரம், இளவரசர் ஹரி தன் மகளுக்கு பெயர் சூட்டுவது தொடர்பில் மகாராணியாரிடம் கேட்கவில்லை என்று கூறியிருக்கிறது.

Categories

Tech |