இளவரசர் ஹாரி தன் வாழ்க்கை கதையை புத்தகங்களில் வெளிப்படையாக குறிப்பிட்டிருப்பதால் அவரின் நெருங்கிய நண்பர்கள் வருத்தம் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளவரசர் ஹாரியின் நெருங்கிய நண்பர்கள், அந்த புத்தகத்தில் வெளியிடப்படும் கருத்துக்களால் தங்களின் தொழிலும் குடும்ப வாழ்க்கையும் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது. இளவரசர் ஹாரி தனக்கு நெருங்கிய தோழர்கள் என்றும் தனக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று பள்ளி மற்றும் கல்லூரி காலங்களிலேயே கூறியிருக்கிறார்.
இதனால், அவர்களின் நட்பு வட்டத்திற்குள் நடக்கும் எந்த ஒரு நிகழ்வுகளும் வெளியில் தற்போதுவரை தெரிவிக்கப்பட்டதில்லை. எனினும் இளவரசர் ஹாரி அமெரிக்காவில் குடியேறியதும் மொத்தமாக மாறிவிட்டார். அனைத்தையும் வெளிப்படையாக கூறிவிடுகிறார். அரச குடும்பத்தின் ரகசியங்கள் கூட இளவரசர் ஹாரி உலகிற்கு வெளிப்படுத்தி விட்டார்.
தற்போது, ஹாரியின் வாழ்க்கை கதை 4 புத்தகங்களாக வெளிவருகிறது. அதில் அடுத்த வருடத்தில் முதல் புத்தகம் வெளியாகிறது. இரண்டாவது புத்தகம் மகாராணியாரின் மரணத்திற்கு பின் வெளிவரும். மேலும் 3 வது புத்தகம் ஹாரியின் மனைவி மேகன் எழுதப்போவதாக கூறப்பட்டிருக்கிறது. எனினும் நான்காம் புத்தகம் பற்றிய தகவலை ரகசியமாக வைத்துள்ளனர்.
இந்நிலையில் தான், தற்போது இளவரசர் ஹாரியின் நண்பர்கள், தங்களை பற்றிய அனைத்து விஷயங்களையும் வெளிப்படையாக குறிப்பிட்டால் அது தங்களின் வாழ்க்கையை பாதிக்கும் என்று அச்சத்தில் உள்ளார்கள். இதுமட்டுமல்லாமல், சில நண்பர்கள் எல்லாவற்றிற்கும் தயாராக இருப்பதாகவும், இளவரசர் ஹாரிக்கு தேவைப்படும் பதில்கள் அனைத்தும் தங்களிடம் இருப்பதாகவும் கூறியிருக்கிறார்கள்.