Categories
உலக செய்திகள்

அப்படி என்ன அவசரம்..? மீண்டும் பணிக்கு திரும்பிய இளவரசர்… வெளியான பரபரப்பு தகவல்..!!

தனக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதால் பிரசவ விடுப்பில் இருந்த பிரித்தானிய இளவரசர் ஹரி ஒரு முக்கியமான விஷயம் காரணமாக மீண்டும் பணிக்கு சென்றுள்ளார்.

ஜெர்மனியில் உள்ள திஸ்ஸடோர்ப்பி என்ற நகரில் இன்விசிட்ஸ் கேம்ஸ் எனும் விளையாட்டு போட்டிகள் வருகின்ற 2023-ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்த விளையாட்டு போட்டிகள் குறித்த முக்கியமான அறிவிப்பை வெளியிடுவதற்காகவே பிரித்தானிய இளவரசர் ஹரி பிரசவ விடுப்பிலிருந்து மீண்டும் பணிக்கு வந்துள்ளார். பிரித்தானிய இளவரசர் ஹரியால் கொண்டுவரப்பட்ட இந்த இன்விசிட்ஸ் கேம்ஸ் எனும் விளையாட்டு போட்டிகள் உறுப்புகளை இழந்த மற்றும் காயமடைந்த போர் வீரர்களுக்கான போட்டி ஆகும்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக 2020-21-ம் ஆண்டு நடத்த முடியாமல் உள்ள இந்த போட்டிகளை பிரித்தானிய இளவரசர் ஹரி மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளார். அதன்படி நெதர்லாந்தில் உள்ள ஹூஜ் என்ற நகரில் 2022-ஆம் ஆண்டிற்கான இன்விசிட்ஸ் கேம்ஸ் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.

Categories

Tech |