இளவரசர் ஹரியின் மனைவி மேகனை மகாராணியார் மன்னிக்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்பது குறித்து மகாராணியாரே முடிவு செய்ய வேண்டும் என மக்கள் கூறியுள்ளனர்.
இளவரசர் ஹரியின் மனைவி மேகன் ராஜ குடும்பத்தை மன்னிக்க தயாராக இருப்பதாக தகவல் வெளியானது. இதுகுறித்து பிரிட்டனில் பிரபல பத்திரிக்கை ஒன்று நடத்திய ஆய்வில் ராஜ குடும்பத்தினர் வேறுபாடுகளை மறந்து உறவுகளை தொடர வேண்டுமா என மக்களிடம் கேட்டபோது மக்களோ மேகன் தான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த ஆய்வில் 94 சதவீதம் பேர் மேகனை ராஜ குடும்பத்தில் மீண்டும் சேர்த்துக் கொள்ளக்கூடாது என கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் 5 சதவீத பேர் கருத்து வேறுபாடுகளை மறந்து ராஜ குடும்பத்தினர் முன்போல் உறவுகளை தொடர வேண்டும் என்று கூறியுள்ளனர். இந்நிலையில் ராஜ குடும்பத்தினர் மன்னிப்பு கேட்டால் நான் மன்னிக்க தயாராக இருக்கிறேன் என மேகன் கூறியிருப்பது மக்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் மன்னிப்பு கேட்க வேண்டியது மேகன் தான் என்றும் மேகனை மன்னிக்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை மகாராணியார் மட்டுமே முடிவு செய்ய வேண்டும் என்றும் மக்கள் கூறியுள்ளனர்.