Categories
உலக செய்திகள்

அப்படி என்ன எழுதியிருக்கிறார்…? அரசு குடும்பத்தை அதிர வைக்கப்போகும்… இளவரசர் ஹாரியின் புத்தகம்…!!!

பிரிட்டன் இளவரசர் ஹாரியின் புத்தகத்தில் அரச குடும்பத்தை அதிர வைக்கும் வகையில் சில விஷயங்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரிட்டன் மகாராணி, தன் மகன் இளவரசர் சார்லஸ் மன்னராக முடி சூடும் போது அவரின் மனைவி கமீலா ராணியாக அறியப்படுவார் என்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, கமீலாவிற்கு பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கின்றன. தன் தாய்க்கு போட்டியாக பார்க்கப்பட்டாலும், இளவரசர் வில்லியம், கமிலாவிற்கு பாராட்டுகளை தெரிவித்திருந்தார்.

ஆனால் இளவரசர் ஹாரி தற்போது வரை, கமிலாவிற்கு பாராட்டு கூறவில்லை. இந்நிலையில் இளவரசர் ஹாரி, தன் புத்தகத்தில் கமலாவை பற்றி தான் நினைப்பதை எழுதியிருப்பதாகவும், அந்த புத்தகம் இந்த வருடம் கடைசியில் வெளிவரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த புத்தகத்தில் இளவரசர் ஹாரி தெரிவித்திருக்கும் சில விஷயங்கள் அரச குடும்பத்தையே ஆட்டம் காண வைக்கும் விதத்தில் இருக்கும் என்று அவரின் நண்பர்கள் கூறியுள்ளார்கள்.

அந்த புத்தகத்தில் என்ன குறிப்பிடப்பட்டிருக்கிறது என்பது அரச குடும்பத்தினருக்கு தெரியாது. எனினும், அந்த புத்தகத்தால், இளவரசர் ஹாரி மற்றும் அரச குடும்பத்தினருக்கு இடையேயான உறவு மேலும் விரிசலடையும் என்று அரச குடும்பத்தின் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

Categories

Tech |