பிரிட்டன் இளவரசர் ஹாரி வெளியிடவுள்ள புத்தகத்தில் அவரின் முக்கியமான அடுத்த இலக்கு யார்? என்று மறைந்த இளவரசி டயானாவின் முன்னாள் முதன்மை பணியாளர் வெளிப்படுத்தியுள்ளார்.
இளவரசர் ஹாரி, தன் வாழ்க்கை குறிப்பாக நான்கு புத்தகங்களை வெளியிடவிருக்கிறார். அவர் வெளியிடவுள்ள புத்தகத்தில், இளவரசர் சார்லசின் மனைவியான கமிலா பார்க்கர் குறித்து சில தகவல்கள் வெளிவரலாம் என்று மறைந்த இளவரசி டயானாவின் முதன்மை பணியாளரான Paul Burrell குறிப்பிட்டிருக்கிறார்.
இளவரசர் ஹாரி, தன் தாய் மரணத்திற்கு பின்பு, நடந்த அனைத்து சம்பவங்களையும் அந்த புத்தகத்தில் வெளிப்படையாக குறிப்பிட்டிருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை என்றும் அவர் கூறியிருக்கிறார். மேலும், இளவரசி டயானாவின் இடத்தில் தற்போது இருப்பது, கமிலா பார்க்கர் தான்.
எனவே அவர் குறித்த பல முக்கியமான ரகசியங்களை கட்டாயம் ஹாரி அந்த புத்தகத்தில் வெளிப்படுத்துவார் என்று தான் உறுதியாக நம்புவதாக கூறியிருக்கிறார். அப்படி அவரை பற்றிய ரகசியங்கள் வெளிவந்தால், இளவரசர் சார்லஸ் ஆத்திரமடைவது உறுதி. மேலும், மறைந்த இளவரசி டயானா இருந்திருக்க வேண்டிய இடத்தில், சார்லஸின் மனைவியாக தற்போது இருக்கும் கமிலா பார்க்கரை பற்றி இளவரசர் ஹாரி பல ரகசியங்களை வெளியிடுவார் என்று தான் கருதுவதாக கூறியிருக்கிறார்.