பிரிட்டன் மகாராணியாரின் இறுதி சடங்கிற்கு இளவரசர் வில்லியமின் மகன் கட்டாயமாக வரவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரச குடும்பத்தில் எந்த குழந்தை பிறந்தாலும் மற்றும் எவர் உயிரிழந்தாலும் முக்கியமாக சில மாற்றங்கள் செய்யப்படும். அதன்படி, மகாராணி மரணமடைந்த பிறகு இளவரசர் சார்லஸ், அரசர் ஆகிவிட்டார். மேலும், இளவரசர் வில்லியமின் மகனான இளவரசர் ஜார்ஜ் தன் தந்தைக்கு அடுத்து நாட்டின் மன்னராகவும் நிலையில் உள்ளார்.
இதனை மக்களுக்கு உறுதிப்படுத்தும் வகையில், அவர் சிறு குழந்தையாக இருந்தாலும் மகாராணியாரின் இறுதிச்சடங்கிற்கு கட்டாயம் வர வேண்டும் என்று அரச குடும்பத்தை சேர்ந்த ஆலோசகர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து இளவரசர் ஜார்ஜ் மற்றும் அவரின் சகோதரி இளவரசி சார்லட் இருவரும் மகாராணியாரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.