Categories
உலக செய்திகள்

என்னோட பிள்ளைக்கு இவங்க பெயர் தான் வச்சிருக்கேன்…. தாத்தாவிற்கு அறிமுகப்படுத்த முடியவில்லை…. பேட்டியளித்த இளவரசி….!!

இளவரசர் பிலிப்பின் நினைவாக அவரது பேத்திகள் தனது குழந்தைகளுக்கு தனது தாத்தாவின் பெயரை சூட்டி மகிழ்ந்துள்ளனர்.

இளவரசர் பிலிப் மற்றும் மகாராணியார் இரண்டாம் எலிசபெத்க்கு 8 பேரப்பிள்ளைகள் இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் 10 கொள்ளுப் பேரப் பிள்ளைகளும் இருக்கிறார்கள். இந்த பேரப்பிள்ளைகள் இளவரசி சாரா மற்றும் இளவரசி யூசினி இருவருக்கும் சமீபத்தில்தான் குழந்தை பிறந்துள்ளது. இவர்கள் இருவருமே தனது தாத்தா மீது அதிக பாசம் கொண்டவர்கள்.

அதனால் அவர்கள் தன் குழந்தைகளுக்கு தனது தாத்தாவின் பெயரை தன் குழந்தைக்கு வைத்து மகிழ்ந்துள்ளனர். இதுகுறித்து யூசினினிடம் கேட்டபோது “என்னுடைய தாத்தா மிகவும் உறுதியானவர். எங்கள் குடும்பத்தில் யாருக்கு எந்த ஆலோசனை வேண்டுமானாலும் எங்கள் தாத்தாவிடம் நான் கேட்போம்” என்று அவர் கூறியுள்ளார். அதனால் தன் தாத்தாவை கவுரவிக்க தன் குழந்தைகளுக்கு அவருடைய பெயரை வைத்ததாக கூறியுள்ளார்.

இந்நிலையில் இளவரசி யூசினி தன் மகனுக்கு ஆகஸ்ட் பிலிப் ஹாக் புரூக்ஸ் என்ற பெயரை சூட்டியுள்ளார். அதேபோல் இளவரசி சாரா தன் மகனுக்கு லூகாஸ் பிலிப் டின்டால் என்ற பெயரை சூட்டியுள்ளார். ஆனால் இவர்கள் கொரோனா பரவல் காரணமாக தங்களுடைய பிள்ளைகளை தனது தாத்தாவிற்கு அறிமுகப்படுத்தும் வாய்ப்பு கிடைக்காமல் போனதால் வருத்தத்தில் இருக்கின்றனர்.

Categories

Tech |