இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்கிற்காக வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் வின்ஸ்டர் மாளிகைக்கு வருகை தந்துள்ளனர்.
பிரிட்டன் மகாராணியாரின் கணவரும் இலவசமான பிலிப் கடந்த 9ஆம் தேதி உயிரிழந்துள்ளார். இவரது மறைவு காரணமாக பிரிட்டனில் 8 நாட்கள் துக்க நாட்களாக அனுசரிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து நேற்று மாலை அவர் இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது.
இதில் பக்கிங்காம் மற்றும் விண்ட்சர் மாளிகைகளை சுற்றி ஆயுதம் தாங்கிய போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் வின்ஸ்டர் ஆகியோர் இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக செயின்ட் ஜார்ஜ் சேப்பலுக்கு வருகை தந்துள்ளனர். மேலும் ராயல் குடும்பத்தினரும் செயின்ட் ஜார்ஜ் சேப்பலுக்கு வருகை தந்துள்ளனர்.
குறிப்பாக இளவரசர் பிலிப்பின் பேத்தியான ஜாரா பிலிப் மற்றும் அவரது கணவர் மைக் டிண்டால் ஆகியோரும் வருகை தந்துள்ளனர். மேலும் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இவரது இறுதிச் சடங்கில் ராயல் குடும்பத்தினர் உட்பட 30 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.