பிரிட்டன் இளவரசர் பிலிப்பின் பிறந்த இடம் முதல் அடக்கம் செய்யப்படும் இடம் வரையிலான தொகுப்புகள்.
பிரிட்டன் இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்கு இன்று நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அவரது பிறந்த இடம் முதல் அவரை அடக்கம் செய்யப்படும் இடம் வரையிலான புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பு காணலாம். கிரீஸ் தீவில் 1921ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10 தேதி இளவரசர் பிலிப் பிறந்துள்ளார்.
இளவரசர் பிலிப்பின் தாயான இளவரசி ஆலிஸ் படுக்கையில் பிரசவிக்கக் கூடாது என்றும் சமனான ஒரு மேசையில் பிரசவிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் ஆலோசித்ததன்படி அவர் தனது படுக்கை அறையில் இருந்து தூக்கி வரப்பட்டு உணவருந்தும் மேசையில் படுக்க வைக்கப்பட்டபின் இளவரசர் பிலிப் பிறந்துள்ளார். அந்த மேசை தான் லண்டனில் உள்ள நிறுவனம் ஒன்றில் உள்ளது. ஒரு சாதாரண மேசைதான். அதன் மீது ஒரு இளவரசர் பிறந்ததால் மதிப்புமிக்கதாகி விட்டது.
இந்நிலையில் இன்று மாலை சரியாக மூன்று மணி அளவில் இளவரசர் பிலிப் பின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. வின்சர் கோட்டையில் உள்ள புனித ஜார்ஜ் சிற்றாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு சுவாரஸ்யமான தகவல் ஒன்று உள்ளது. அது என்னவென்றால் புனித ஜார்ஜ் சிற்றாலயத்தில் கீழே 16 அடி ஆழ பள்ளத்தில் மன்னர்கள் மற்றும் ராணிகளின் உடல்கள் அடங்கிய பெட்டிகளை வைக்கும் இடம் ஒன்று உள்ளது. அங்கு இரும்பு கதவுகளுக்குப் பின்னால் அவர்களது உடல்கள் அடங்கி பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
அந்த பெட்டிகளுக்குள் மன்னர் மூன்றாம் ஜார்ஜ், நான்காம் ஜார்ஜ், ஐந்தாம் ஜார்ஜ் மற்றும் நான்காம் வில்லியம் ஆகியோரின் உடல்கள் அங்குதான் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இளவரசர் பிலிப்பின் உடல் அங்கு நிரந்தரமாக வைக்கப்பட போவதில்லை. மேலும் மகாராணியார் தனது வாழ்வின் இறுதி கட்டத்தை எட்டிய பின்னர் இளவரசர் பிலிப்பின் உடல் புனித ஜார்ஜ் சிற்றாலயத்தில் இருந்து அகற்றப்பட்டு மன்னர் ஆறாம் ஜார்ஜ் மற்றும் முதலாம் எலிசபெத் மகாராணியார் ஆகியோரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கு இளவரசர் பிலிப் மற்றும் மகாராணியாரின் உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்படுமாம்.