பிரிட்டன் இளவரசர் வில்லியம், அவரது மனைவி கேத் மிடில்டன் ஆகியோர் முதல் முறையாக, 5 நாள் சுற்றுப்பயணமாகப் பாகிஸ்தானுக்குச் சென்றனர். இதனால், பாகிஸ்தான் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
அப்போது, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே உள்ள ராவல்பிண்டி நூர்கான் விமான நிலையத்துக்கு வந்தவர்களை வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரோஷி வரவேற்றார்.
நான்காம் நாளான நேற்று இளவரசர் வில்லியமும், இளவரசி கேட் மிடில்டனும் லாகூரில் உள்ள பாட்ஷாஹி மசூதியை கண்டுகளித்தனர். மேலும், லாகூரில் அமைந்துள்ள ஷவுகத் கானும் நினைவு புற்றுநோய் மருத்துவமனையைப் பார்வையிட்டு, அங்கு சிகிச்சைபெற்று வரும் நோயாளிகளைக் கண்டு நலம் விசாரித்தனர். பின், நோயாளிகளின் உறவினர்களைக் கண்டு ஊக்கமளித்துள்ளனர்.
1996, 1997ஆம் ஆண்டுகளில் மறைந்த இளவரசி டயானா, பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின் போது, இதே மருத்துவமனையில் நோயாளிகளைக் கண்டு நலம் விசாரித்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.