Categories
உலக செய்திகள்

என் அம்மா சாவுக்கு இதுதான் காரணம்..! பிரபல ஊடகவியலாளரை… குற்றம்சாட்டிய இளவரசர்..!!

இளவரசர் வில்லியம் மற்றும் ஹரி தங்கள் தாயார் டயானாவின் திடீர் மறைவிற்கு பிரபல ஊடகவியலாளர் மார்ட்டின் பஷீர் முன்னெடுத்த நேர்காணலே காரணம் என்று முதன்முறையாக குற்றம்சாட்டியுள்ளனர்.

இளவரசர் வில்லியம் தமது தாயாரின் சித்தபிரம்மைக்கும், தொடர்ந்து தனிமைப்படுத்தலுக்கும் ஊடகவியலாளர் மார்ட்டின் பஷீர் குறித்த நேர்காணலுக்காக நெறிமுறையற்ற விவாதமே காரணம் என்று கொந்தளித்துள்ளார். மேலும் இளவரசர் வில்லியம் தனது தாயாரை அந்த நேர்காணலில் முன்வைக்கப்பட்ட கேள்விகள் காயப்படுத்தியதாகவும், அந்த நேர்காணலே தமது பெற்றோரின் விவாகரத்து நடவடிக்கைகளை துரிதப்படுத்தியது என்றும் கூறியுள்ளார். இளவரசர் ஹரியும் அதே கருத்தையே தெரிவித்துள்ளார்.

பிரபல ஊடகத்தில் வெளிவந்த அந்த நேர்காணல் மட்டும் தான் தனது தாயாரின் மறைவுக்கு முதன்மை காரணம் என்று கூறிய அவர் ஒரு உயிரை அபாண்டமாக பறித்துக் கொண்டது என்றும் கூறியுள்ளார். இளவரசி டயானா 1997-இல் அந்த கோர விபத்தில் இறப்பதற்கு முன்னதாக அவர் கண்டிப்பாக தாம் ஏமாற்ற பட்டிருப்பதை உணர்ந்திருப்பார் என்று இளவரசர் வில்லியம் குறிப்பிட்டுள்ளார். அதோடு மட்டுமின்றி டயானாவின் மரணத்துக்கு பிரபல ஊடக நிறுவனமே காரணம் என்று அவருடைய உறவினர்களும் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.

Categories

Tech |